புதிய பதிவுகள்
புதிய பதிவுகள்
தலையங்கம்
ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை
இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் பயணிக்கும் பாதை குறித்தான கவலை நம்மைத் துரத்துகிறது. பள்ளி திறந்த நாளிலேயே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் போதை சவகாசத்தால் கொலையான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுபோல நெல்லை அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் விதிமுறையை மீறி பயணித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூவரை போலீசார் தடுத்து, வாகனத்தின் சாவியை பறிமுதல் செய்து பெற்றோருடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு தயாரித்து, நள்ளிரவில் புறக்காவல் நிலையத்தின் மீது வீசியிருக்கின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் ஒருவர் மது அருந்தியிருந்தார். இந்தச் சம்பவம் அவர்களின் படிப்பையும் எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.;
சமூகம்
கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்;
குட் மார்னிங் தாத்தா.. என்ன இப்பத்தான் பேப்பர் படிக்கிறீங்க..!! லேட்டா எந்திரிச்சீங்களா? ஓஹோ.. நீ லேட்டா எந்திரிச்சுட்டு நான் கேக்குறதுக்குள்ள நீ முந்திட்டு கேக்குறியா? இப்பச் சொல்லு.. ஏன் லேட்டு? ஸ்கூல் போக வேண்டாமா? போகணும்.. போகணும்... ஸ்கூல் என்றால் மீன்கள் கூட்டம் என எங்க மிஸ் சொன்னாங்களே? இதுக்கும் மீன் கூட்டத்துக்கும் ஸ்கூலுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை ஸ்கூல்ல மிஸ் I mean.. You mean.. அப்டீன்னு சொல்றாங்களே.. அதான் காரணமா? அந்த Mean.. இல்ல.. இந்த மீன்.. சொல்றேன். கேளு.. பொதுவாக மீன் குழுக்களை அறிவியல் ரீதியில் “ஷோல்” (Shaal) மற்றும் “ஸ்கூல்” (School) என இரண்டு வகையாகச் சொல்வார்கள். மீன்கள் பாதுகாப்புக்காகவோ, உணவுக்காகவோ ஒன்றாக சேர்ந்து தங்களுக்கு தோன்றியபடி நகரும்போது அதை “ஷோல்” எனச் சொல்வார்கள். ;
இலக்கியம்
கே.பி.பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை;
செப்புத்தகடு என்பது தூயசெம்பு அல்லது செப்புக் கலப்பு உலோகத்தால் ஆன தட்டையான, திண்மையான ஒரு துண்டாகம். இதன் சொற்றொடர் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக செப்புத்தகடு என்பது தூயசெம்பு அல்லது செப்புக் கலப்பு உலோகத்தால் ஆன தட்டையான, திண்மையான ஒரு துண்டு ஆகும். இதன் சொற்றொடர் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தொழில் துறை, உதிரிப்பாகங்கள், பண்டைய வரலாற்று ஆவணங்கள், நுண்கலை அச்சுக்கலைக்கான கருவிகள் அல்லது இந்திய உணவுப் பாத்திரங்கள் என நான்கு வகைப்படுத்தப்படும். வரலாற்றில் குறிப்பாகத் தெற்காசியப் பகுதிகளில் இந்தியச் செப்பேடுகள் (தாமிர பாத்திரம்) பண்டைய சட்டபூர்வ ஆவணங்களாகத் திகழ்ந்தன. ;
அறிவியல்
டாக்டர் .அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், சிவகங்கை ;
பதினாறு வயதுக்குட்பட்ட சிறார் சிறுமியிடத்தில் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் மூட்டுகள் சார்ந்த அழற்சி நோய்க்கு, குழந்தைப்பருவ மூட்டழற்சி (Juvenile Arthritis) என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்க்கான காரணம் இன்னதென இன்னும் அறியப்படாதமையால், ஜூவனைல் இடியோபதிக் ஆர்த்ரைட்டிஸ் (Juvenile Idiopathic Arthritis) என்று அழைக்கிறோம். இடியோபதிக் என்றால் மருத்துவ அறிவியல் ரீதியாக காரணம் அறியப்படாத நோய் என்று அர்த்தம். ஆலிகோ ஆர்த்ரைட்டிஸ் (சில மூட்டுகளை மட்டும் உள்ளடக்கிய நோய்), ரியுமடாய்ட் ஃபேக்டர் பாசிடிவ் பாலி ஆர்த்ரைட்டிஸ், ரியுமடாய்ட் ஃபேக்டர் நெகடிவ் பாலி ஆர்த்ரைட்டிஸ், சிஸ்டமிக் ஆர்த்ரைட்டிஸ், சோரியாட்ரிக் ஆர்த்ரைட்டிஸ், எண்திசைட்டிஸ் தொடர்புடைய ஆர்த்ரைட்டிஸ், மாற்றமற்ற ஆர்த்ரைட்டிஸ் ஆகிய ஏழு வகையான மூட்டழற்சி நோய்களை இந்த ஜூவனைல் ஆர்த்ரைட்டிஸ் எனும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வரலாம். ;
வாழ்வியல்
புஜங்காசனம் முதுகுவலியைச் சரி செய்யலாம்.
இன்றைய கணினி யுகத்தில், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் பலருக்கும் முதுகுவலி, கழுத்துவலி மற்றும் உடல் சோர்வு போன்றவை பொதுவானதாகிவிட்டன. முதுகுத்தண்டை நெகிழ்வாகவும், முதுகுத் தசைகளை வலுவாகவும் வைத்திருக்க உதவும் சிறந்த யோகாசனங்களில் ஒன்றாக புஜங்காசனம் விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் “புஜங்கா” என்றால் நாகப் பாம்பு என்று பொருள். நாகம் தனது படத்தை விரித்து உயர்த்தியிருப்பதைப் போன்ற தோற்றத்தில் இந்த ஆசனம் செய்யப்படுவதால் இதற்கு புஜங்காசனம் என்று பெயர் வந்தது. இந்த ஆசனம் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மார்புப் பகுதியை விரிவடையச் செய்து சுவாசத் திறனையும் மேம்படுத்துகிறது.;